13 ஆண்டுக்கு பிறகு வங்கதேசம் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான்!பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் – வங்கதேசத்திற்கு செல்ல காரணம்?
Pakistan to visit Bangladesh after 13 years Pakistan Deputy Prime Minister Ishaq Dar Reason for going to Bangladesh
வங்கதேசத்தின் அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களுக்கிடையே, பாகிஸ்தான் நாட்டின் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை மந்திரியுமான இஷாக் தர், 13 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசத்திற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு, அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்தபோது வெடித்த போராட்டங்கள் வன்முறையாக மாறின. அதன் விளைவாக, ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். பின்னர் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ், இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டாக்காவில் விமானம் மூலமாக வந்திறங்கிய இஷாக் தருக்கு, வங்கதேச அரசு சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, அவர் வங்கதேச இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ், முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்புகளில், இருநாட்டு உறவுகள் முன்னேற்றம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய அமைதி குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி 13 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசம் வந்திருப்பது, இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
English Summary
Pakistan to visit Bangladesh after 13 years Pakistan Deputy Prime Minister Ishaq Dar Reason for going to Bangladesh