உலகெங்கிலும் இருந்து பிரதமர் மோடிக்கு குவியும் பாராட்டுக்கள்; உயரிய விருது வழங்கி கௌரவித்துள்ள ஓமன் மற்றும் எத்தியோப்பியா..!
Oman and Ethiopia have honored Prime Minister Modi by bestowing upon him their highest awards
பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 03 நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டார். அவருக்கு இரண்டு நாடுகளின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-ஓமன் உறவுகளை வலுப்படுத்துவதில் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, பிரதமர் மோடிக்கு சுல்தான் ஹைதம் பின் தாரிக், சுல்தானகத்தின் தனித்துவமான சிறப்புமிக்க 'ஆர்டர் ஆப் ஓமன்' விருதை வழங்கினார்.
குறித்த விருது, ஏற்கனவே ராணி இரண்டாம் எலிசபெத், நெதர்லாந்து ராணி மேக்சிமா, ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ, நெல்சன் மண்டேலா மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பட்டியலில் பிரதமர் மோடியும் இடம் பெற்றுள்ளார். அத்துடன், மஸ்கட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடி இந்த விருதைப் பெற்றார்.
மேலும் மோடி, எத்தியோப்பியா சென்றபோது, அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'கிரேட் ஹானர் ஆப் எத்தியோப்பியா' வழங்கி கௌரவிக்கப்பட்டது. செல்லும் நாடுகளில் எல்லாம், பிரதமர் மோடிக்கு அந்நாடுகள் சிறப்பான வரவேற்பையும், உயிரிய விருதையும் அளித்து கௌரவிப்பது, சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருவதை வெளிக்காட்டுவதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Oman and Ethiopia have honored Prime Minister Modi by bestowing upon him their highest awards