'இந்த காலங்களில் வடக்கில் போட்டிகளை நடத்த கூடாது; தென்னிந்தியாவில் நடத்துங்கள்'; பிசிசிஐக்கு சசி தரூர் கோரிக்கை..!
Shashi Tharoor has requested the BCCI not to hold cricket matches in the north during the winter season
லக்னோவில் வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான நான்காவது டி-20 போட்டி, மைதானத்தில் பனிப்பொழிவு காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக நிருபர்களிடம் காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறியதாவது: டிசம்பர் நடுப்பகுதி முதல் ஜனவரி நடுப்பகுதி வரை, வட இந்தியாவின் ஒவ்வொரு இடமும் மூடுபனியால் சூழப்பட்டிருக்கும். இந்த நேரத்தில் மூடுபனி இப்படி இருக்கும்போது, கிரிக்கெட் வீரர்கள் பந்தைப் பார்க்கக்கூட முடியாத நிலை ஏற்படும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

நேற்று, தென் ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான போட்டியை நடத்த முடியாததால் முழு தேசமும் விரக்தியடைந்தது என்று குறிப்பிட்டுள்ளதோடு, இந்த காலகட்டத்தில், தென்னிந்தியாவில் போட்டிகளை திட்டமிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக திருவனந்தபுரத்தில் ஒரு அற்புதமான மைதானம் உள்ளது, மக்களை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் வந்து விளையாடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,கேரளா தயாராக உள்ளது, மற்ற தென்னகப் பகுதிகளில் இதுபோன்ற மூடுபனி போன்ற காலநிலை இருக்காது என்று நான் உறுதியாக நம்புவதக்கவும், கிரிக்கெட் போட்டிகளை திட்டமிடும் போது வானிலை நிலைமைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள பிசிசிஐயை நாம் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த காலக்கட்டங்களில், திருவனந்தபுரத்தில் போட்டியை திட்டமிட்டிருக்க வேண்டும், அங்கு காற்றின் தரக் குறியீடு தற்போது 68 ஆக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், திட்டமிடப்பட்டிருந்த போட்டிகள் திடீரென்று ரத்து செய்யப்படக்கூடாது. இவாறு செய்வதால் கிரிக்கெட் பிரியர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணரக்கூடாது என்றும் தென்னிந்தியாவில் போட்டிகளை திட்டமிட்டால் ரசிகர்களும் கண்டு மகிழலாம் என்றும் நிருபர்களிடம் சசி தரூர் கூறியுள்ளார்.
English Summary
Shashi Tharoor has requested the BCCI not to hold cricket matches in the north during the winter season