கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ள வடகொரியா; தென்கொரியா ராணுவம் குற்றச்சாட்டு..!
North Korea Conducts Intercontinental Ballistic Missile Tests
வடகொரியா கடந்த 02 நாட்களாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து வருவதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. பதற்றத்தை தனிப்பதற்கான சியோலின் நம்பிக்கைகளை வடகொரியாவின் இந்த தொடர் சோதனைகள் சிதைத்துள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது.
கடந்த ஏப்ரல் 08-ஆம் தேதி பிற்பகல் 02.20 மணியளவில் வடகொரியா தனது கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பை நோக்கி ஒன்சன் பகுதியில் இருந்து கூடுதலாக அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை ஏவியதாக தென்கொரியாவின் கூட்டுப்படை தலைமை தகவல் தெரிவித்துள்ளது.
அதற்கு முன்னதாக வடகொரியா அதே பகுதிக்கு அருகில் இருந்து அடையாளம் தெரியாத பல் குறுகிய தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவியதாக கூட்டுப்படை தலைமை கூறி இருந்தது. இந்த ஏவுகணைகள் சுமார் 240 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்ததாக கூறப்படுகின்ற நிலையில், இது குறித்து விரிவான ஆய்வு நடத்தி வருவதாகவும், கடந்த செவ்வாய் அன்று பியாங்கியாங்கிற்கு அருகில் இருந்து சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதை கண்டறிந்ததாக தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது.
இந்த சூழலில் தென் கொரியாவின் மாளிகையான ப்ளூஹவுஸ் அவசர தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டியுள்ளது. இது முந்தைய ஏவுகணை சோதனைகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீமானங்களை மீறும் செயல் என்று குறிப்பிட்டதோடு, இதுபோன்ற சோதனைகளை முடிவுக்கு கொண்டு வருமாறு தென் கொரியா ஊடகங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்த ஏவுகணைகள் ஏவப்பட்ட சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு கடலில் விழுந்ததாக ஜப்பான் கடலோர காவல் படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
North Korea Conducts Intercontinental Ballistic Missile Tests