300 க்கும் அதிகமான பள்ளி மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற பயங்கரவாதிகள்..! - Seithipunal
Seithipunal


துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் பள்ளியில் இருந்த 317 பெண் குழந்தைகளை கடத்திச் சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 

நைஜீரிய நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, நைஜீரிய இராணுவத்திற்கும் - அங்கு ஆதிக்கம் செலுத்திவரும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. 

இதனால் பலரும் பரிதாபமாக பலியாகியுள்ள நிலையில், அவ்வப்போது பள்ளியில் பயின்று வரும் மாணவ - மாணவிகளை குறிவைத்து கடத்திச் செல்லும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. மாணவ - மாணவியர்கள் மீட்டுக் கொண்டுவர அந்நாட்டு காவல்துறை மற்றும் இராணுவ முயற்சி செய்து வருகிறது.

மேலும், பெண் குழந்தைகளை கடத்தி சென்று தகவல் பெற்றோர்கள் பதறிப்பறிதவிக்கும் நிலையில், தற்போது 317 பெண் குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டு காவல்துறை மற்றும் இராணுவம் களமிறங்கியுள்ளது. 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அங்குள்ள அரசு அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் 42 பேர் கடத்தப்பட்ட நிலையில், அவர்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nigeria Terrorist Kidnapped 300 girl Students in Gun Point At School


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->