''ஒட்டுமொத்த நாட்டின் இதயத்திலும் விழுந்த அடி; யதார்த்தத்தை உணர்ந்துள்ளோம்; கண்ணீர் சிந்த மாட்டோம்''; நேபாள பேரிடர் குறித்து அந்நாட்டு பிரதமர் உரை..! - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, நேபாளம் - திபெத் எல்லையை ஒட்டிய பகுதியில் பனிப்பாறைகள் சரிந்து விழுந்து நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், ஏராளமான வீடுகள், கடைகள், சாலைகள், பாலங்கள் போன்றவை அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 4,800-க்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இந்த பாதிப்பு குறித்து நேபாள நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அந்நாட்டு பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளதாவது;

இந்த நெருக்கடியான நேரத்தில் நாட்டின் தலைமை தைரியம், ஆதரவு மற்றும் உறுதியை வழங்க வேண்டும் என்றும்,  இந்த யதார்த்தத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். கண்ணீர் சிந்த மாட்டோம் என்று தங்கள் நாட்டில் நேர்ந்த துயர சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

அத்துடன், ரசுவா, நுவாகோட், தாடிங் ஆகிய மூன்று மாவட்டங்கள் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும், இது ஒட்டுமொத்த நாட்டின் இதயத்திலும் விழுந்த அடி என்றும், இதற்கு எதிராக உறுதியுடனும், தைரியத்துடனும் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் போராடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அனைத்து பாதுகாப்புப் படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புப் படைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் வழங்கி வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மீட்புப் பணிகளுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்களும் தேவை கருதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என  உறுதி அளித்துள்ளார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இலவச மருத்துவ சிகிச்சையை அளித்து வருவதுடன், வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு மற்றும் தங்கமிடங்களை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மின்சாரம், குடிநீர் விநியோகம், போக்குவரத்து ஆகியவற்றை மீட்டெடுக்க அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதக்கவும் நேபாள பிரதமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.                                                             


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nepals Prime Minister speaks about the disaster calling it a blow to the heart of the entire country


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->