06 நாட்களில் 100 மீட்புப் பணிகள்; கவனத்தை ஈர்த்துள்ள நேபாளத்தின் முதல் பெண் ஹெலி​காப்​டர் கேப்டன் பிரியா அதி​காரி..! - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, நேபாளம் - திபெத் எல்லையை ஒட்டிய பகுதியில் பனிப்பாறைகள் சரிந்து விழுந்து நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுவரை இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 4,800-க்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

இந்த பேரிடர் மீட்பு பணியில் அந்நாட்டின் முதல் பெண் ஹெலி​காப்​டர் கேப்டனான பிரியா அதி​காரி அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு, பாராட்டுகளையும் பெற்றுள்ளார். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட கடந்த 06 நாட்​களுக்​குள் சுமார் 100 மீட்​புப் பணி​களில் ஈடு​பட்டு ஏராள​மானோரை காப்​பாற்றியுள்ளார். இதுகுறித்​து, பிரியா அதி​காரி கூறியுள்ளதாவது;

வெள்​ளத்​தால் கடுமை​யாக பாதிக்​கப்​பட்ட ரசுவா பகு​தி​யில் இன்​னும் ஏராளமானோர் காணா​மல் போயுள்​ளனர். திடீர் வெள்​ளத்​துக்​குப் பிறகு திமுரே பகு​தி​யில் இருந்து முதல் இரண்டு நாட்​களில் மட்​டும் 200-க்​கும் மேற்​பட்​டோர் மீட்​கப்​பட்​டதாக தெரிவித்துள்ளார்.

இந்த மீட்பு பணிகளில் ராணுவத்​தின் 06 ஹெலி​காப்​டர்​கள் பணி​யில் ஈடுபட்டன. 06 நாட்​களுக்​குள் சுமார் 100 மீட்​புப் பணி​களில் ஈடுபட்டு ஏராள​மானோரை காப்​பாற்​றியுள்ளதாக கூறியுள்ளார். அதாவது, ''ஒவ்​வொரு முறையும் நான் சென்று தரை​யிறங்​கு ​போது, அங்கு மக்​கள் இருப்​ப​தை​யும், அவர்​கள் எங்​களை நோக்கி கையசைப்​ப​தை​யும் பார்க்​கிறேன். அப்​போது, 'நீங்​கள் உயிர் தப்​பி​விட்​டீர்​கள்' என்று அவர்​களிடம் கூறினேன்'' என்று தெரிவித்துள்ளார்.

பிரியா அதி​காரி

சவால் மிக்க இந்த விமானப் போக்​கு​வரத்​துத் துறை​யில், நேபாளத்​தின் முதல் பெண் ஹெலிகாப்​டர் கேப்​டன் என்ற பெரு​மையை பிரியா அதி​காரி பெற்றுள்ளார். சுற்​றுச்​சூழல் அறி​வியல் படித்​துள்​ள இவர்,  விமானப் பணிப்​பெண்​ணாக பணி​யாற்​றி​யுள்ளார். அதன் பின்னர், பிலிப்​பைன்ஸ் சென்று ஹெலி​காப்​டர் ஓட்​டு​வதற்​கான பயிற்சியை பெற்​றுள்ளார். 

கடந்த 2017-ஆம் ஆண்டு முழுநேர ஹெலி​காப்​டர் விமானி​யாகியுள்ளார். அதிக உயரத்​தில் மீட்​புப் பணி​களை மேற்​கொள்​வ​தில் நிபுணத்​து​வம் பெற்​ற இவர், இமயமலைப் பகு​தி​களில் தேடு​தல் மற்றும் மீட்​புப் பணி​களில் ஈடு​பட்​டதுடன், எவரெஸ்ட் சிகரத்​தில் காயமடைந்த மலை​யேற்ற வீரர்​களை​யும் மீட்​டுள்​ளார். சுமார் 6,200 மீட்​டர் உயரம் வரை​யிலும் அவர் மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டரை இயக்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nepals first female helicopter captain Priya Adhikari


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->