சமூக வலைதளத்தால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - மூன்று பேர் கைது..! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் பஸ்தி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவருக்கு, சமூக வலைதளத்தின் மூலம் அதே பகுதியை சேர்ந்த ஒரு மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சில நாட்களுக்குள் இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். இந்நிலையில் கடந்த வாரம் அந்த மருத்துவர் இளம்பெண்ணை நேரில் சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தியதால், அந்த பெண் அவரின் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார்.

அப்போது அந்த மருத்துவர் தன்னுடைய ஹாஸ்டலுக்கு வருமாறு வற்புறுத்தினார். அதற்கு சம்மதம் தெரிவித்த அந்த பெண், அவருடைய ஹாஸ்டலுக்கு சென்றார். அங்கே அந்த பெண்ணுக்கு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. 

அங்குள்ள அறையில், மருத்துவரின் இரண்டு நண்பர்கள் காத்திருந்தனர். அங்கு சென்ற அந்த பெண்ணை ஓர் அறையில் அடைத்து மருத்துவர்கள் மூவரும் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண், லக்னோ போலீசிடம் செப்டம்பர் 27ம் தேதி புகாரளித்தார். அந்த புகாரின் பேரில், மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near utrapradesh social media friend sxually harassment in young girl


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->