ATM இயந்திரத்தை கண்டுபிடித்த திரு.ஜான் ஷெப்பர்ட் பேரோன் நினைவு தினம்!. - Seithipunal
Seithipunal


ATM இயந்திரத்தை கண்டுபிடித்த திரு.ஜான் ஷெப்பர்ட் பேரோன் அவர்கள் நினைவு தினம்!.

ஜான் ஷெப்பர்ட் பேரோன் (John Adrian Shepherd-Barron, ஜூன் 23, 1925 – மே 15, 2010) இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர் ஆவார் ஏ.டி. எம் எனப் பரவலாக அறியப்படும் தன்னியக்க வங்கி காசளிப்பு இயந்திரத்தை  கண்டுபிடித்தவர். பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.

ஒருமுறை வங்கியில் இருந்த தனது பணத்தை எடுக்க முடியாமல் தடுமாறியபோது ஷெப்பர்டுக்கு மிகவும் வேதனை உண்டானது. வங்கியின் வேலை நேரம் முடிந்து விட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. தன்னுடைய பணத்தை தான் விரும்பிய நேரத்தில் எல்லாம் எடுப்பதற்கு ஒரு வழி இருந்தால் என்ன என்று அவர் அப்போது சிந்தித்தார். அந்தசிந்தனையின் பயனாக சாக்லேட் கட்டிகளை வழங்கும் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அதேபோல பணத்தை வழங்கும் ஏடிஎம் எனப்படும் தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தின் மாதிரியை உருவாக்கினார். 1967ம் ஆண்டு இவர் உருவாக்கிய ஏ.டி.எம். எந்திரம் இங்கிலாந்தின் வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது.

இந்த தன்னியக்க காசளிப்பு இயந்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது உள்ளதுபோல ஏடிஎம் அட்டைகள் உருவாக்கப்படவில்லை. அதற்கு பதிலாக தனிச்சிறப்பான காசோலைகள் பயன்படுத்தப்பட்டன. காசோலைகளை இயந்திரத்தில் வைப்பதற்கு முன்பாக அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும். முதலில் ஷெப்பர்டு 6 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை உருவாக்கினார். ஆனால் அவற்றை நினைவில் கொள்ள முடியவில்லை என்று மனைவி புகார் கூறியதையடுத்து 4 இலக்கம் கொண்ட எண்ணாக மாற்றினார். இன்று வரை அதுவே தொடர்கிறது. காலப்போக்கில் ஏடிஎம் இயந்திரங்கள் மிகவும் பிரபலமாகி உலக அளவில் 17 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. வங்கியில் இருக்கும் சொந்த பணத்தை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எடுத்துக்கொள்ளும் வசதியை அளித்துள்ள ஏடிஎம் இயந்திரங்கள் இன்று நவீன வாழ்க்கையின் அடையாளமாகத் திகழ்கின்றன.

 ஜான் ஷெப்பர்ட் பேரோன் நீண்ட நாள் உடல்நலமின்றி ஸ்காட்லாந்தில் உள்ள ரெய்மோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி தனது 84ஆம் வயதில் 2010 மே 19 ஆம் தேதி அன்று காலமானார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mr. John Shepherd who invented the ATM machine is celebrated on this memorial day


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->