பயங்கர காட்டுத்தீ.! 50-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்.! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசியா நாடான தென்கொரியாவின் கங்வான் மாகாணத்தில், கிழக்கு கடற்கரை நகரமான கங்னியுங் நகரின் காட்டுப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பலத்த காற்று வீசியதால் தீயானது மளமளவென அடுத்தடுத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 6 ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தீ வேகமாக பரவியதால் அப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படடுள்ளனர்.

இந்நிலையில் காட்டுத் தீயால் 170 ஹெக்டேர் நிலப்பரப்பு மற்றும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தேசிய வனவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காட்டுத்தீ தொடர்பாக தீயணைப்பு அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், மூன்று தீயணைப்பு அதிகாரிகள் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பலத்த காற்றின் காரணமாக மின்கம்பங்கள் மீது மரம் விழுந்து தீ பற்றி வேகமாக பரவியுள்ளதாகவும், தீயை அணைக்கும் பொழுது மழை பெய்ததால் காட்டுத்தீயின் வேகம் குறைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காட்டுப் பகுதியிலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

More than 50 houses destroyed due to forest fire in south korea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->