குரங்கு அம்மை நோய் எதிரொலி.. குரங்குகளை அடித்துக் கொள்ளும் மக்கள்.. WHO அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


குரங்கு அம்மை நோய்க்கு அவசர அவசரமாக பெயர் மாற்றும் நடவடிக்கையில் உலக சுகாதார அமைப்பு ஈடுபட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் முதன்முதலில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. தற்போது, இந்தியா உட்பட நிறைய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். சர்வதேச சுகாதார அவசர நிலையாக குரங்கு அம்மை நோயை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

சமீப காலமாக குரங்கு அம்மை நோயின் பெயர் பாரபட்சத்தை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முதன்முதலில் 1958-ல் டென்மார்க் நாட்டில் குரங்கு வைரஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த நோய் காரணமாக நிறைய குரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

சமீபத்தில்கூட குரங்கு அம்மை நோய் பயத்தால் நிறைய பொதுமக்கள் குரங்குகளுக்கு விஷம் வைத்து கொலை செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது. எனவே, குரங்குகளை இந்த பாதிப்பிலிருந்து காப்பாற்ற உடனடியாக குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க வேண்டும் என்று சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த நோய்க்கு வேறு பெயரை பொதுமக்கள் பரிந்துரைக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Monkey Pox name may Changed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->