கொரோனா அலை ஓய்வதற்குள் புதிதாக பரவும் குரங்கு அம்மை.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடு முழுவதும் பரவி மக்களை வாட்டி வதைத்தது. சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. 

இந்நிலையில், குரங்கு அம்மை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கனடாவில் சிலருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து மாசாசூசெட்ஸ் திரும்பியவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகள் அமெரிக்காவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உள்ளதை உறுதி செய்துள்ளது. அந்த நபரின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் குரங்கு அம்மை வைரஸ் பரவுவது குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார மையம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Monkey pox in USA


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->