அறிவியல் உலகை அதிரவைத்த அதிசயம்...! -15 வயதில் பிஎச்.டி சாதனை
miracle that shocked scientific world PhD achievement age 15
பெல்ஜியத்தின் புதுமை பிள்ளை லாரன்ட் சிமன்ஸ், வயது வெறும் 15. ஆனால் அறிவியல் உலகில் இவர் சாதிப்பது வியக்க வைக்கும் அளவுக்கு அசாதாரணம். குட்டி ஐன்ஸ்டீன் என ரசிகர்கள் நேசத்துடன் அழைக்கும் லாரன்ட், 11-வது வயதிலேயே இளங்கலை இயற்பியல் பட்டத்தையும், அடுத்த ஆண்டே அதே துறையில் முதுகலை பட்டத்தையும் கைப்பற்றியவர்.
சமீபத்தில் அவர் முனைவர் பட்ட ஆய்வுக்காக ஒரு புரட்சிகரமான தலைப்பைத் தேர்வு செய்தார்“சூப்பர்புளூயிட்ஸ் & சூப்பர் சாலிட்ஸ்: மிகக் குறைந்த வெப்பநிலைகளில் அணுக்கள் மற்றும் எலக்ட்ரான்களின் நடத்தை”. கற்பனைக்கே இடமில்லாத அளவு குளிர்ந்த சூழலில் பொருட்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை விளக்கும் அவரது ஆய்வு, சர்வதேச அறிவியல் உலகையே கவனிக்க வைத்தது.

இவ்வாய்வுக் கட்டுரையின் மூலம், உலகின் அதிகக் குறைந்த வயதில் முனைவர் பட்டம் பெற்றவர் என்ற சாதனையை லாரன்ட் சிமன்ஸ் முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.அவரின் மேதைமையை பார்த்து அமெரிக்கா, சீனாவில் உள்ள பல பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆர்வத்துடன் வேலை வாய்ப்பு வழங்க முன்வந்தன.
பெரும் சலுகைகள், பெரும் சம்பளம்,எதுவும் இவரை கவரவில்லை.ஏனெனில் லாரன்ட் சிமன்ஸுக்கு ஒரு பெரும் கனவு இருக்கிறது.“சூப்பர் மனிதர்களை உருவாக்க வேண்டும்… மனித வாழ்நாளை அதிகரிக்க புதிய அறிவியல் ரகசியங்களை கண்டுபிடிக்க வேண்டும்”என்று அவர் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
English Summary
miracle that shocked scientific world PhD achievement age 15