#துருக்கி.! மினிபஸ்-டிரக் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


துருக்கியில் மினிபஸ்-டிரக் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி வடமேற்கு மாகாணமான பலிகேசிரில் நேற்று துர்சன்பே மாவட்டத்திலிருந்து திருமண நிகழ்வுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற மினிபஸ், பால் ஏற்றி வந்த ட்ரக் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 10 பேர் காயம் அடைந்து உள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்பு குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக துர்சன்பே மற்றும் கெப்சூட் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதையடுத்து அவர்களின் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு பலகேசிர் அட்டாடர்க் நகர மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு காயமடைந்த 10 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minibus truck accident in turkey


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->