படிக்கச் சென்ற இடத்தில 10 பெண்களை மயக்கி பலாத்காரம் செய்த வாலிபர்! - Seithipunal
Seithipunal



இங்கிலாந்தில் 10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சீன வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து லண்டன் கிரவுன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி உயர்கல்வி பயின்று வந்த சீனாவைச் சேர்ந்த ஜென்ஹாவோ ஜூ  என்ற மாணவன்  ஆன்லைன் செயலி மூலம் பல பெண்களிடம் பழகி வந்துள்ளார். அவர்களில் சிலரை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ,அதன்பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடைபெற்றுவந்தது.அப்போது இந்த வழக்கு விசாரணையில், இதேபோல் அவர் 10 பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வழக்கில் ஜென்ஹாவோவை குற்றவாளி என கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

இருப்பினும் மேலும் இந்த வழக்கில் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து , இந்த வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிட்டு, இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளிக்கலாம் என போலீசார் அறிவித்தனர்.அதென்பேரில்  போலீசார் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 24 பெண்கள் வாக்குமூலம் அளிக்க முன்வந்துள்ளனர்.

இந்த நிலையில், 10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஜென்ஹாவோவிற்கு ஆயுள் தண்டனை விதித்து லண்டன் கிரவுன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி அவர் குறைந்தபட்சம் 24 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அதோடு, அவர் மீது புகார் தெரிவித்த 24 பெண்களின் வாக்குமூலங்கள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man seduces 10 women in school rapes them


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->