ரூ.80 லட்சம் ஓய்வூதியத்தைப் பெற தாயின் உடலை 'மம்மி' ஆக பதப்படுத்திய மகன்; தாயார் போன்றே மாறு வேஷமிட்டு மோசடி..!
Man disguises himself as mother to claim Rs 80 lakh pension in Italy
வடக்கு இத்தாலிய நகரமான போர்கோ விர்ஜிலியோவைச் சேர்ந்த, கிராசியெல்லா டால் ஓக்லியோ என்ற செவிலியர் கடந்த 03 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். ஆனால், அதை மறைத்து அவருடைய ஓய்வூதியத்தைப் பெற அவரது மகன் நினைத்து மோசடியில் இறங்கியுள்ளார்.
இதற்காக அவர், 1970களில் அவரது தாயார் பயன்படுத்திய ரவிக்கை, நீண்ட பாவாடை, நெயில் பாலிஷ், முத்து நெக்லஸ் மற்றும் பழங்கால காதணிகளைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு அல்ல மாறாட்ட மோசடி செய்து, அதன்மூலம் அவர் சுமார் 53,000 யூரோக்கள் (சுமார் USD 94,000) பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

1993-ஆம் ஆண்டு ராபின் வில்லியம்ஸ் நடித்த படத்திற்குப் பிறகு, இந்த வினோதமான அத்தியாயம் 'திருமதி டவுட்ஃபயர் ஊழல்' என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், எல்லோரையும் ஏமாற்றி வந்த அவருடைய முகத்தோற்றத்தில் வித்தியாசம் இருப்பதை அதிகாரி ஒருவர் கவனித்துள்ளார்.
குறிப்பாக, அவருடைய கழுத்து சற்று தடிமனாக இருந்துள்ளதோடு, சுருக்கங்கள் விசித்திரமாக இருந்துள்ளன. அத்துடன்,கைகளில் உள்ள தோல் மற்றும் சுருக்கங்கள் 85 வயது முதியவரின் தோலைப் போல தெரியவில்லை; அவரின் குரல் பெண்மையாக இருந்தாலும் சில சமயங்களில் ஆண் தன்மையும் தெரிந்துள்ளது. இதையடுத்து, தாயாரின் படமும் மகனின் படமும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியபோது, அவர் பெண் வேடத்தில் வந்தது அதிகாரிகளை ஏமாற்றியதோடு, ஓய்வூதியத்தையும் பெற்றுக்கொண்டுள்ளதை கண்டு பிடித்துள்ளனர். பின்னர் தாயாரை போல வேடமணிந்து மோசடியில் ஈடுபட்டதாக அவர் விசாரணையின்போது ஒப்புக் கொண்டுள்ளார். அதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலதிகமக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தித்திக்கும் தகவலை கேட்டு போலீசார் அதிர்ந்து போயுள்ளனர். அதாவது அவரின் தாயின் உடலை ‘மம்மி’ போன்று பதப்படுத்தி வைத்திருப்பதைத் தெரிவித்துள்ளார். அந்த உடலைக் கண்டுபிடித்த போலீசார், அவர் இயற்கையான காரணங்களால் இறந்திருக்கலாம் என்று தற்போது நம்புவதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உண்மை தெரியவரும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் போர்கோ விர்ஜிலியோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Man disguises himself as mother to claim Rs 80 lakh pension in Italy