500 உயிர்களை பறித்த மாபெரும் பேரழிவு...! இந்தோனேசியாவில் 14 லட்சம் மக்கள் வாழ்வாதாரப் போரில்...!
major disaster that claimed 500 lives 1point4 million people Indonesia fighting their livelihood
ஆசியாவில் அமைந்துள்ள இந்தோனேசியாவை கடந்த வாரம் தாக்கிய மாபெரும் வெள்ளப் பேரழிவு இன்னும் ஓயாத கோரத்துடன் தொடர்கிறது. வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே,இந்த மூன்று மாகாணங்களும் அசாதாரண அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.இதன் காரணமாக, அரிதாக மட்டுமே உருவாகும் ‘சென்யார்’ என்ற சூறாவளி புயல் மலாக்கா ஜலசந்தியை கடும் தாக்கம் செய்தது.

இதனால் கொட்டித்தீராத கனமழை, இடியுடன் கூடிய பேரலையச்சலிப்பு, தொடர்ச்சியான நிலச்சரிவு போன்றவற்றால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500-க்கு மேற்பட்டோர் மர்மமாக காணாமல் போயிருப்பது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் போராடி வருகின்றனர்.இந்நிலையில் ஆயிரக்கணக்கானோருக்கு அடிப்படை தேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. அசே மாகாணத்தின் பிடீ ஜெயா பகுதியைச் சேர்ந்த அரினி அமாலியா தனது துயரத்தை பகிர்ந்தபோது,“வெள்ளநீர் சுனாமி போல வீசியெடுத்தது. என் பாட்டி தனது வாழ்நாளில் பார்த்த மிக மோசமான பேரழிவு இதுதான் என்று அழுதார்” எனக் கூறியுள்ளார்.
வெள்ளத்தால் பல பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன; சாலைகள் சேறும் சகதியுடன் பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்லன. 3 நாட்களாக உணவு இன்றி துடிக்கும் குடும்பங்கள், தூய்மையான குடிநீரின் பற்றாக்குறை, இணையதளமும் மின்சார வசதியும் முடங்கியுள்ளதால் மக்கள் கடும் அவலத்தில் உள்ளனர்.
கட்டுக்கட்டாகும் பேரழிவின் மத்தியில், மீட்பு படையினரும், அவசர உதவி குழுவினரும் இடைவிடாது மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
major disaster that claimed 500 lives 1point4 million people Indonesia fighting their livelihood