மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டா வின்சி நினைவு தினம்!
Leonardo da Vinci Death Anniversary
உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த திரு.லியானார்டோ டா வின்சி அவர்கள் நினைவு தினம்!.
உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டா வின்சி (Leonardo da Vinci) 1452ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் பிறந்தார்.

இவர் வேதிப் புகை, கவச வாகனங்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை வடிவமைத்து உருவாக்கினார். பல இயந்திரங்களையும் வடிவமைத்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தனது 'தி லாஸ்ட் சப்பர்' ஓவியத்தை 1490ஆம் ஆண்டு வரையத் தொடங்கி, 1498ஆம் ஆண்டு நிறைவு செய்தார். 1503ஆம் ஆண்டு புகழ்பெற்ற மோனலிசா வண்ண ஓவியத்தைத் தீட்டத் தொடங்கி, மூன்றாண்டுகளில் அதை நிறைவு செய்தார்.
விமானம், நீர்மூழ்கிக் கப்பல் தொடங்கி கருவில் குழந்தை எப்படி இருக்கும் என்பதுவரை இவரது கற்பனைகள் விரிந்திருந்தது.
உலகம் போற்றும் உயர்ந்த கலைஞரும் பன்முகத் திறன் வாய்ந்த மேதையுமான லியானார்டோ டா வின்சி 67வது வயதில் 1519 மே 02 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
Leonardo da Vinci Death Anniversary