காசா மோதல் முடிவுக்கான கடைசி வாய்ப்பு இது...! -டிரம்ப் எச்சரிக்கையில் பதறிய இஸ்ரேல்-ஹமாஸ்
last chance end Gaza conflict Israel Hamas shocked by Trumps warning
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான பல மாதங்களாக நீடித்து வரும் காசா மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் 'டொனால்ட் டிரம்ப்' தீவிரமாக இறங்கியுள்ளார். அண்மையில் அவர் 20 அம்சங்களைக் கொண்ட விரிவான போர் நிறுத்தத் திட்டத்தை முன்வைத்தார்.
அந்தத் திட்டத்தை இஸ்ரேல் உடனே ஏற்றுக்கொண்டது. அதேபோல், பிணைக்கைதிகள் விடுதலை உள்ளிட்ட சில முக்கிய பரிந்துரைகளை ஹமாஸும் ஒப்புக்கொண்டது. இதில் மீதமுள்ள அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இதன்மூலம் இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்தும் நிலைக்கு வந்துள்ளன.இந்தப் பின்னணியில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே இன்று எகிப்தில் முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
அதில் அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் பங்கேற்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதியான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது,"இந்த வார இறுதியில், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக்கைதிகள் விடுதலை மற்றும் காசா போரை நிறுத்துவது குறித்த மிக முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இப்பேச்சுகள் இதுவரை வெற்றிகரமாகவும் வேகமாகவும் நடைபெற்று வருகின்றன.
ஆனால் இப்போது நேரம் மிக முக்கியமானது. அனைவரும் உடனடியாகச் செயல்பட வேண்டும்.நான் இந்த நூற்றாண்டு பழமையான மோதலை நேரடியாக கண்காணித்து வருகிறேன்.தாமதம் ஏற்பட்டால், உலகம் காண விரும்பாத ரத்தக்களரி மீண்டும் வெடிக்கும் அபாயம் உள்ளது,” என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
English Summary
last chance end Gaza conflict Israel Hamas shocked by Trumps warning