நிலவில் வீடுகள்… 10 ஆண்டுகளில் மனித குடியேற்றம்! – எலான் மஸ்கின் மெகா கனவு
Houses Moon Human Settlement 10 Years Elon Musk Mega Dream
உலக பணக்காரர்களில் முன்னணி இடம் பிடித்திருக்கும் தொழில்நுட்ப அதிபர் எலான் மஸ்க், விண்வெளி ஆராய்ச்சியில் தனக்கென புதிய பாதையை உருவாக்கியவர்.
மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்ற வேண்டும் என்ற துணிச்சலான இலக்குடன் தொடங்கப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், பால்கன் மற்றும் ராப்டர் போன்ற அதிநவீன ராக்கெட்களை உருவாக்கி நாசாவுக்கும் சேவை செய்து வருகிறது.

செவ்வாயை அடைவதற்கான மிகப்பெரிய கனவுடன், இந்த ஆண்டுக்குள் ஆளில்லா விண்கலனை அனுப்ப திட்டமிட்டிருந்த மஸ்க், தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்துள்ளார்.
செவ்வாய் தூரமும் சவால்களும் அதிகம் என்பதால், முதல் கட்டமாக இலக்கை நிலவுக்கே மாற்றுவதாக அவர் அறிவித்துள்ளார்.“நிலவை அடைவதே அடுத்த முக்கிய படி. இந்த ஆண்டுக்குள் நிலவுக்கு விண்கலன் அனுப்பப்படும்.
அடுத்த 10 ஆண்டுகளில் அங்கே தன்னிறைவு கொண்ட நகரம் உருவாக்கி, மனிதர்களை குடியேற்றுவோம்” என மஸ்க் தெரிவித்தார்.
இதற்கிடையில், நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனாவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், விண்வெளி போட்டி தற்போது ‘செவ்வாய்’ இலக்கிலிருந்து ‘நிலவு’ இலக்காக மாறி, உலக நாடுகள் இடையே புதிய ரேஸை உருவாக்கியுள்ளது.
English Summary
Houses Moon Human Settlement 10 Years Elon Musk Mega Dream