கார்லசனை வீழ்த்திய குகேஷ்...! புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததால் மகிழ்ச்சி!
Kukesh beats Carlsen Happy to be ranked first points table
இந்திய இளம் கிராண்ட் மாஸ்டரும், உலக சாம்பியனுமான டி.குகேஷ் அவர்கள், குரோஷியாவில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் 2025 போட்டியில் கார்ல்சனை வீழ்த்தி மாபெரும் வெற்றியைப் பெற்றார்.

நேற்று அதாவது வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியின் 6 -வது சுற்றில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ், உலக சாம்பியன் கார்ல்சனை தோற்கடித்தார்.இதன் மூலம், போட்டி புள்ளிகள் பட்டியலில் குகேஷ் முதலிடத்திற்கு முந்தினார்.
கார்ல்சன்:
மேலும், போட்டிக்கு முன்பு உரையாடிய கார்ல்சன் தெரிவித்ததாவது, "இதுபோன்ற போட்டிகளில் குகேஷ் சிறந்து விளங்க முடியும் என்று எதையும் நிரூபிக்கவில்லை. அவரை பலவீனமான வீரர்களில் ஒருவராக நான் கருதுகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் குகேஷ் அவரை வென்றது முக்கியத்துவம் பெறுகிறது.இந்தப் போட்டியில் குகேஷ் தொடர்ச்சியாகப் பெற்ற 5 -வது வெற்றி இதுவாகும். இதற்கு முன்னதாக 2 -ம் நாள் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவ் மற்றும் அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஃபேபியானோ கருவானா ஆகியோருக்கு எதிராகவும் குகேஷ் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kukesh beats Carlsen Happy to be ranked first points table