ஹண்டிங்டன் ரெயிலில் மர்ம நபர்களின் கத்திக் கொடுமை...! – பயணிகள் அச்சத்தில் ஓட்டம்...!
Knife attack by mysterious individuals Huntington train Passengers flee fear
இங்கிலாந்தில் டான்காஸ் டர் முதல் லண்டன் கிங்ஸ் கிராஸ் நோக்கி செல்லும் ரெயிலில், ஹண்டிங்டன், கேம்பிரிட்ஷையர் அருகே பயணிகள் மீது மர்ம நபர்கள் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினர்.தீவிரமான சம்பவத்தால் பயணிகள் அலறி ஓடி, சிலர் கழிவறைக்குள் பதுங்கினர். பயணிகள் சிலர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ரெயில் ஹண்டிங்டன் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுத்தனர்.இந்த தாக்குதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்; அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் தெரிவித்ததாவது, இதில் 9 பேர் உயிருக்கு ஆபத்தான காயங்கள் உடையவர்களாக உள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத எதிர்ப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் கூறியதாவது, தாக்குதல் நடத்திய ஒருவர் பெரிய கத்தியை வைத்திருந்தார், ரெயிலில் எங்கெங்கும் ரத்தம் காணப்பட்டது.
இச்சம்பவத்திற்கு இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் கடுமையாக கண்டனம் தெரிவித்ததாவது,"ஹண்டிங்டன் அருகே ரெயிலில் நடந்த தாக்குதல் பயங்கரமானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது. பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. அவசர நடவடிக்கைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதியில் உள்ள மக்கள் போலீசாரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும்".
English Summary
Knife attack by mysterious individuals Huntington train Passengers flee fear