தென்கொரியாவின் சின்னத்தனமான செயல்.. கொந்தளிக்கும் கிம்..!! - Seithipunal
Seithipunal


வடகொரிய நாட்டிற்கும் தென்கொரிய நாட்டிற்கும் பல வருடமாக பகையானது நீடித்து வருகிறது. கடந்த 2018 ஆம் வருடத்தில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு பின்னர் அமைதி ஏற்பட்டது. இந்த நிலையில், மீண்டும் இவர்களுக்குள் பகை கடுமையான அளவு அதிகரித்துள்ளது. 

மேலும், கடந்த சில மாதமாக வடகொரியாவில் இருந்து தப்பி செல்லும் வடகொரிய எதிர்ப்பாளர்கள், தென்கொரியாவில் இருந்து கருப்பு நிற பலூன்கள் மற்றும் வடகொரிய அரசை விமர்சனம் செய்து பிரசுரம் வெளியிடுவதல் போன்ற செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனால் வடகொரிய அதிபர் கிம்மிற்கு அதிகமான கோபம் ஏற்பட்டு, தென்கொரியாவை எதிரி நாடாக அறிவித்தார். மேலும், இருநாட்டு அதிகாரிகள் கலந்து பேசும் கட்டிடத்தை வெடிவைத்து தகர்த்தார். 

மேலும், வடகொரியா தலைவர் கிம் சகோதரி கிம் யோ ஜாங், தென்கொரியாவின் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தென்கொரியா நாய் போல பிஸ்கட்டிற்கு அலைகிறது என்றும் தெரிவித்திருந்தார். வடகொரியா - தென்கொரியா இடையே இருந்த ஒட்டுமொத்த உறவும் அதிரடியாக துண்டிக்கப்பட்டது. 

இதனால் ஆத்திரமடைந்த தென்கொரியா, வடகொரிய அதிபரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து பலூனை பறக்க விட்டுள்ளது. எடிட்டிங் முறையில் வடகொரிய அதிபரின் மனைவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பிரசுரம் விநியோயோகம் செய்யப்பட்டு வரும் செயல் வடகொரியாவை கோபத்தின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kim Jong Un angry about South Korea activity


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->