கையில் மைக்... பையில் என்னவோ?.. இன்டெர்போலுக்கே விபூதி அடித்த நித்தி.. கைலாஷ் குறித்து குபீர் தகவல்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த நித்யானந்தா பெங்களூரை அடுத்துள்ள பிடதி பகுதியில் நித்தியானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வந்தார். இவரின் சொற்பழிவை கேட்ட கோடான கோடி பக்தர்கள் மற்றும் பக்தைகள் ஆதரவு பெருகவே., இவரின் கிளைகளும் இந்தியா முழுவதும் செயல்பட துவங்கியது. 

இவருக்கு இந்தியாவில் உள்ள பக்தர்கள் மற்றும் பக்தைகளை போலவே வெளிநாட்டு ஆதரவும் பெருகியது. இவரது செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது என்று எண்ணியிருந்த நிலையில்., பகீரென நடிகை ரஞ்சிதாவுடன் குதூகலமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

இந்த வீடியோ உண்மை இல்லை என்று இன்று வரை இரட்டை கால்களில் அமர்ந்து சமாளித்து வரும் நிலையில்., அவ்வப்போது பல சர்ச்சை பேச்சுகளும் பேசி இணையதள நெட்டிசன்களிடம் குட்டு வாங்கி சென்றார். இவரை ஒரு குணசித்திர காமடி நடிகராக இணையத்தளத்தில் உருவாக்கி நெட்டிசன்கள் விளையாடி வந்த நிலையில்., பெரும் அதிர்ச்சியாக குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்கள் எழத்துவங்கியது.

 nithyanandha,

இது தொடர்பாக புகார்கள் அடுத்தடுத்து தொடர்ந்து எழவே., காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அனைவருக்கும் டிமிக்கி கொடுத்து அவ்வப்போது இணையத்தளம் மூலமாக சீடர்களிடையே உரையாற்றி வந்த நிலையில்., கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாகவே நித்யானந்தா சிஷ்யர்களுடன் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக பேசப்பட்டது. 

இந்த கூற்றுகளை அவ்வப்போது பதிவிடும் வீடியோ காட்சிகளில் மறுப்பு தெரிவித்து தூணிலும் இருக்கிறேன்., துரும்பிலும் இருக்கேன் என்று சமாளித்து வந்த நிலையில்., தற்போது வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்வலையை காவல்துறையினருக்கு ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ள நித்தியானந்தா தென்னமெரிக்க நாட்டில் உள்ள ஈக்வடார் தீவை விலைக்கு வாங்கியுள்ளார். 

nithyanandha,

இந்த தீவை வாங்கிய நித்தியானந்தா எல்லைகள் இல்லாத., நாடுகள் இல்லாத., உண்மையான இந்து நாட்டை கட்டமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும்., இந்த நாட்டிற்கு கைலாஷா நாடு என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாகவும்., இந்து மதத்தினை பின்பற்றும் எவரும் இந்நாட்டுடைய குடிமகனாக ஆகலாம் என்றும் அறிவித்துள்ளார். 

மேலும்., இந்நாட்டுடைய தற்போதைய மக்கள் தொகை 10 கோடி என்றும்., இந்நாட்டிற்கான பாஸ்போர்ட் மற்றும் மொழி உள்ளிட்டவையும் தீர்மானம் செய்துள்ளதாகவும்., நாட்டிற்கான அமைச்சரவை., பிரதமருக்கு இணையான அதிகாரமுள்ள நித்தியானந்தா., உள்நாட்டு பாதுகாப்பு துறை., இராணுவ துறை போன்றவற்றை அமைத்து தினமும் பல ஆலோசனைகளும் மேற்கொள்ளாட்டு வருகிறது.

nithyanandha,

கைலாச நாடு என்பது.,  இந்து மதத்தினை பின்பற்ற பிற நாட்டில் மறுப்பு தெரிவித்தார்களுக்கான நாடு என்றும்., கைலாஸா என்பது எல்லையற்ற நாடு என்றும்., உலகில் உள்ள இந்துவால் இந்நாடு உறவாக்கப்பட்டுள்ளதாகவும்., இந்நாட்டில் 10 துறைகள் உள்ளது என்றும்., இந்நாட்டு அரசோடு சர்வதேச உறவு., டிஜிட்டல் ஈடுபாடு., சமூக ஊடக அலுவலகம் மற்றும் வீட்டு விவகாரம்., பாதுகாப்பு., வர்த்தகம்., கல்வி போன்ற பிற துறைகளும் உள்ளது. 

kailaasaa nation citizenship, கைலாசா நாடு,

இந்நாட்டிற்கான தனி அந்தஸ்து கோரி உலக நாடுகள் சபையான ஐ.நாவை நாடவுள்ளதாகவும்., இந்நாட்டிற்கான கடவுச்சீட்டு இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும்., இந்நாட்டில் இந்துக்கள் மட்டுமே வாழ இயலும் என்றும்., இந்நாட்டிற்கு தேவையான அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கையை அமெரிக்காவை சார்ந்த பிரபல நிறுவனம் பொறுப்பேற்று செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kailaasaa nation citizenship and kailaasaa island announced by Nithyananda


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->