கொரோனா வைரஸால் மிரள வேண்டாம்.! ஜப்பான் விஞ்ஞானிகளின் ஆய்வில்.. அற்புத முடிவுகள்.!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸின் தாக்கம் மனிதர்களின் உடலில் சுமார் 9 மணி நேரம் இருக்கும் என்று ஜப்பான் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உலகம் முழுதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரசின் பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.

வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் WHO பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதே நேரத்தில், வைரஸ் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் அனைவரும் தீவிரம் காட்டி வருகிறனர்.

இந்த நிலையில், "கொரோனா வைரஸ் மனித உடலில் எத்தனை மணி நேரம் இருக்கும்" என்று ஜப்பானிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில், கொரோனா வைரஸ் சுமார் 9 மணிநேரம் வரை மனித உடலில் உயிரோடு இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு வைரஸான இன்ப்ளூயன்சா மனிதர்களின் தோலில் 1 புள்ளி 8 மணி நேரம் இருக்கும் என்று தெரியவருகிறது.

அத்துடன், சனிடைசர்களில் உள்ள எத்தனால், கொரோனா வைரஸ் மீது படும் பொழுது, வெறும் 15 வினாடிகளில் கொரோனா வைரஸ் அழிந்துவிடுகின்றது என்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவி வந்தால் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்று உலக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள், வைரஸ் தாக்கத்தில் சிக்கி தவிக்கின் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan research results about corona


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal