வக்கிரபுத்திக்காரர்களால் தாக்கப்பட்ட பெண்மணி.. 3 வருடத்திற்கு பின்னர் கிடைத்த நீதி.!
Italy Lady Pilot Attacked by Co Workers of Male Flight Pilots
இத்தாலி நாட்டினை சார்ந்த பெண்மணி கியூலியா. இவர் விமானப்படையில் பணியாற்றி வரும் பெண் விமானி ஆவார். இவர் தன்னுடன் பணியாற்றி வரும் சக ஆண் விமானிகளுடன், கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் வைத்து பெண் விமானியை தூக்கி சென்ற ஆண் விமானிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அருகில் இருந்த நினைவு கல்லின் மீது தலையை பிடித்து மோதவைத்து கொடுமை செய்துள்ளனர்.

இதனைதொடர்ந்து அங்குள்ள நீச்சல் குளத்தில் அவரை தூக்கி வீட்டு சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான புகாரின் பேரில் 8 ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அனைவரையும் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களை வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Italy Lady Pilot Attacked by Co Workers of Male Flight Pilots