இரத்தப் பிரிவுகளை வகைப்படுத்திய திரு.கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் அவர்கள் பிறந்ததினம்!.
It is the birthday of Mr Karl Landsteiner who classified blood groups
இரத்தப் பிரிவுகளை வகைப்படுத்திய திரு.கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் அவர்கள் பிறந்ததினம்!.
இரத்தப் பிரிவுகளை வகைப்படுத்திய உயிரியல் வல்லுநர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner)1868ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி ஆஸ்திரியா தலைநகர் வியன்னா-வில் பிறந்தார்.
இவர் இர்வின் பாப்பருடன் இணைந்து 1909-ல் போலியோ வைரஸ்கள் குறித்து ஆராய்ந்து போலியோ வைரஸ்-ஐ (polio Virus) கண்டறிந்தார். இதற்காக இவருக்கு 1926-ல் அரோன்சன் பரிசு (Aronson Prize) கிடைத்தது. மேலும் ஏ, பி, ஓ என்ற இரத்த வகையை 1901-ல் முதன்முதலாக கண்டறிந்தார்.

1927-ல் பல புதிய வகை இரத்தப் பிரிவுகளை கண்டறிந்ததற்காக 1930-ல் இவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
உயிரியல், உடற்கூறியல், நோய் எதிர்ப்பாற்றல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 75வது வயதில் 1943 ஜூன் 26 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
It is the birthday of Mr Karl Landsteiner who classified blood groups