இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹூ பதவி பறிப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியதோடு பல இஸ்ரேலியர்களை பிணைய கைதிகளாக கொண்டு சென்றனர். இதனையடுத்து இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்தது. காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இருதரப்பிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,000 தாண்டியுள்ளது. 

இஸ்ரேல் ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹூ அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். காசா மீது அணுகுண்டு வீசப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். 

இதற்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து தனது கருத்து தெரிவித்து கூறப்பட்டதாக இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹூ விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் தான் அவர் இஸ்ரேல் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை பிரதமரின் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel Minister Amihai Eliyahu stripped of his post


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->