வடக்கு காசாவை அடித்து நொறுக்கும் இஸ்ரேல்.!! வெளியான பரபரப்பு வீடியோ!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த அக்டோபர் 7ம் தேதி நடத்திய தாக்குதலுக்கு பிறகு 23 நாட்களாக இரு தரப்பினருக்கும் இடையே போர் முண்டுள்ள நிலையில் வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக தற்போது தரைவழி தாக்குதலையும் விரிவுபடுத்தி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இருதரப்பிலும் தற்போது வரை 9,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் இந்த அறிவிப்பு காசா மக்களை கதி கலங்க வைத்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "வடக்கு காசாவில் எங்கள் தரைப்படை நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துகிறோம். இஸ்ரேல் ராணுவத்தில் துருப்புக்களால் வழிநடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் ஹமாஸ் கட்டமைப்புகளைத் தாக்கியது. இஸ்ரேலின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கண்காணிப்பு நிலைகளை தாக்கியது. பல பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர்" என பதிவிட்டு வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தப்படும் வீடியோவை பகிர்ந்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel expand ground operation in northern gaza


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->