தந்தையின் விபரீத செயல்... அதிஷ்டத்தால் தப்பித்த குழந்தை... பதறிப்போன அக்கம் பக்கம்.!! - Seithipunal
Seithipunal


ஐஸ்லாந்து நாட்டில் இருக்கும் புவேர்ட்டோ ரிக்கா பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில், எட்டாவது மாடியில் தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இருக்கும் நிலையில், குழந்தையை பால்கனியில் ஊஞ்சல் கட்டி தந்தை வேடிக்கை காட்டியுள்ளார். 

மேலும், ஊஞ்சலை ஆட்டும் சமயத்தில் வேகமாக கட்டிடத்திற்கு வெளியே வரும் வகையில் இயக்கியுள்ளார். குழந்தை கட்டிடத்தின் விளிம்பு வரை சென்று வந்த நிலையில், இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள், இதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

பின்னர் இதனை இணையத்தளத்தில் பதிவு செய்த நபர், குழந்தையின் தந்தையை சமூக வலைதள நெட்டிசன்கள் வசைபாடலுக்கு உள்ளாக்கவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது. மேலும், இதுபோன்ற பாதுகாப்பற்ற சம்பவங்கள் குழந்தைகளின் உயிரை பறிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Island father swing baby in balcony at dangerous level


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->