ஈரானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.0 ஆக பதிவாகி உள்ளது.! அச்சத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


ஈரானின் தெற்கே ஹார்மோஜ்கன் பகுதியில் வடகிழக்கு பகுதியில் உள்ள பந்தர் லெங்கேவில் இருந்து 23 கி.மீட்டர்கள் தொலைவில் 10 கி.மீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.0 ஆக பதிவாகி உள்ளததாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.  ஈரான் நாடு பூகம்பம் ஏற்படும் மண்டலத்தில் அமைந்துள்ளது.  சில நேரங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.  நாட்டின் வடக்கு பகுதியில் பல ஆண்டுக்கு முன்பு  ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 2 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

English Summary

iraon country earthquke


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal