அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த 'பகீர்' பதிலடி...! குவைத் மீது பாய்ந்த ஏவுகணைகள்...! - உலக நாடுகளை உலுக்கிய அதிரடித் தாக்குதல்...! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் அண்மைக் காலமாக தாக்குதல் மற்றும் பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.இதற்கு முன்பு அமெரிக்காவின் அதிநவீன உளவு டிரோன்களில் ஒன்றாக கருதப்படும் எம்.க்யூ.-1 டிரோனை ஈரான் சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சூழலில், ஈரானின் கெருக் மற்றும் கெஷ்ம் தீவுப் பகுதிகளில் அமெரிக்கா வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.இந்த நடவடிக்கையின் போது ஈரானின் ரேடார் கண்காணிப்பு மையங்கள் மற்றும் டிரோன் ஏவுதளங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச வான்வெளியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க டிரோன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கான பதிலடியாகவே இந்த வான்வழி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இன்று அதிகாலை ஏவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் விரைவாக செயல்பட்டு, தங்கள் வான்பரப்பிற்குள் நுழைந்த ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை நடுவானிலேயே இடைமறித்து அழித்துவிட்டதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில், “ஈரான் உண்மையிலேயே பேச்சுவார்த்தை மூலம் தீர்வை நாட விரும்புகிறது. அது அமெரிக்காவுக்கும், எங்களுடன் இணைந்துள்ள நாடுகளுக்கும் பயனளிக்கும் ஒப்பந்தமாக அமையும். பொறுமையுடன் காத்திருந்து நிகழ்வுகளை கவனியுங்கள்.

இறுதியில் நிலைமை சாதகமாகவே முடிவடையும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அமெரிக்கா–ஈரான் இடையேயான இந்த புதிய பதற்றம் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் மீண்டும் பாதுகாப்பு அச்சத்தை அதிகரித்துள்ளதுடன், சர்வதேச அரசியல் வட்டாரங்களிலும் தீவிர கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran response America Missiles fired at Kuwait surprise attack that shook world


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->