ஹிஜாபுக்கு எதிரான தொடர் போராட்டத்தின் எதிரொலி..!! கலாச்சார காவல் படையை கலைத்தது ஈரான் அரசு..!! - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணியை அணியாத பெண்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் நடைமுறை மேற்கத்திய நாடான ஈரானில் கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் அணியாத குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மாஷா அமனி என்ற பெண் காவல்நிலையில் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் ஈரானில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டும், பெண்கள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து பெண்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக பல தரப்பட்ட மக்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்ட அடக்கு முறையில் இளைஞர்களும் பெண்களும் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ஈரானில் தீவிரமடைந்தது. பல இடங்களில் பெண்கள் ஹிஜாபை கழட்டி வீசி தீயிட்டு எரித்து தங்களை எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். சமீப காலமாக ஈரான் விளையாட்டு வீரர்களும் இந்த போராட்டத்தில் களமிறங்கினர். 

ஈரானில் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து இஸ்லாமிய மத சடங்குகள் பின்பற்றுவதை கண்காணிக்கவும் ஹிஜாப் அணிவதை உறுதி செய்யவும் ஏற்படுத்தப்பட்ட கலாச்சார காவல் படை பிரிவு கலைப்படுவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஈரான் அரசின் இத்தகைய முடிவு தங்களுக்கு கிடைத்த வெற்றி என ஹிஜாப் எதிர்ப்பு போராட்ட குழுவினர் மற்றும் அந்நாட்டு பெண்கள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran govt disbands cultural police due to protest against hijab


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->