இந்தோனேஷியாவில் சேமேரு எரிமலை வெடித்து சிதறியது...! - Seithipunal
Seithipunal


இந்தோனேஷியாவை பொறுத்த வரையில், அந்நாட்டில் அதிகளவிலான தீவுகள் உள்ளது. மேலும், அதிக அளவிலான எரிமலைகளும் உள்ளது. இந்த எரிமலைகள் அவ்வப்போது வெடித்து சிதறும் சம்பவங்களும் நடைபெறுகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகிய நிலையில், 70 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், தற்போது எரிமலை குமுற தொடங்கியுள்ளது. அந்நாட்டில் உள்ள ஜாவா தீவில் உள்ள சேமேரு எரிமலை (Mount Semeru) வெடித்து சிதறி சாம்பலை வெளியேற்ற துவங்கியுள்ளது. இதனால் ஜாவா பரப்பில் உள்ள 5.4 கிமீ அளவிலான தூரம் வரை சாம்பல் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள் அவசர நிலையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதமும் இதனைப்போன்று சேமேரு எரிமலை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indonesia Mount Semeru Eruption Volcano 17 Jan 2021


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->