இந்திய வம்சாவளி கனடா மருத்துவர் சுமன் குல்பே பாலியல் குற்றச்சாட்டில் அதிர்ச்சி ஒப்புதல்...!
Indian origin Canadian doctor Suman Kulbe makes shocking admission harassement allegations
கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் 'சுமன் குல்பே' மீது பெரும் அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்தது. அங்கு தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பல நோயாளிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் குவிந்தன.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்றது.அந்த விசாரணையின் போது, சுமன் குல்பே தான் நோயாளிகளுக்கு தவறான முறையில் நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டார்.

ஆனால், தனது மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் பல தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன என்றும், உண்மை வெளிக்காட்டப்படவில்லை என்றும் வாதிட்டார். மேலும், மருத்துவப் பயிற்சியின் போது தனது பயிற்சியாளருடன் காதல் உறவு இருந்ததையும், அந்த உறவில் உடலுறவு நடந்ததையும் நீதிமன்றத்தில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, “நான் ஒரு பாரம்பரியமான இந்தியக் குடும்பத்தில், கலாசார மதிப்புகளுடன் வளர்க்கப்பட்டவள்” என்று நீதிமன்றத்தில் உணர்ச்சி வசப்பட்டு தெரிவித்தார். ஆனால், நீதிபதிகள் அவரது வாதங்களை நிராகரித்தனர். மேலும் அந்த விசாரணையில் அவர், நோயாளி ஒருவருடன் உடலுறவு வைத்ததுடன், மேலும் இருவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டது நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இறுதியாக, நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதில் மருத்துவராக இருந்த சுமன் குல்பேவின் மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.
English Summary
Indian origin Canadian doctor Suman Kulbe makes shocking admission harassement allegations