ஒரே நாளில் 10 பாலியல் கொடூரங்கள்! சீர்குலைந்த தமிழக சட்டம்-ஒழுங்கு, தவெக அரசின் மௌனம் - நயினார் நாகேந்திரன் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், "பெண்மை போற்றப்படும் தமிழகத்தில், ஒரே நாளில் (23/06/2026) பத்து பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. திண்டுக்கல் பேருந்து நிலையம் முதல் சென்னை மெரினா வரை பள்ளிச் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், தூய்மைப் பணியாளர்கள் என எவருக்கும் திரு. ஜோசப் விஜய் அவர்கள் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதை இக்கொடூரங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

மேடைகளில் வாய்ச்சவடால் பேசும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய், தன் கண்முன்னே சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதைக் கண்டும் மௌனம் காப்பது ஏன்? கிருஷ்ணகிரியில் ஒரு பெண் மானத்தைக் காக்கத் தற்கொலைக்கு முயலும் அவலமும், மெரினாவில் "வேலை முக்கியம்தான், ஆனால் மானத்தை அடகு வைக்க முடியாது" என்று கதறும் ஒரு ஏழைத் தாயின் அபயக்குரலும் முதலமைச்சரின் காதுகளில் விழவில்லையா? குற்றவாளிகள் காவல்துறையின் மீது பயமின்றித் திரிவது இந்த அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.

எனவே பெண்களின் பாதுகாப்பைக் கேலிக்கூத்தாக்கிய தவெக அரசுக்கு என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்றும், இனியாவது முதலமைச்சர் தனது மௌனத்தைக் கலைத்து காவல்துறையைத் தட்டி எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp nainar condemn to tvk govt cm vijay


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->