ஒன்பது மாதங்களில் 61 பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்; 55 பெண்களை ஆபாச படம்; 42 பெண்களிடமும் கடுமையான பாலியல் துன்புறுத்தல்; இந்திய மசாஜ் நிபுனருக்கு 13 ஆண்டுகள் சிறை..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் 61 பெண்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமித் சதீஷ் ரஸ்தோகி என்பவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சுமித் சதீஷ் ரஸ்தோகி என்பவர், கடந்த 2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டுக்குக் குடிபெயர்ந்தார். அவர் அடிலெய்டின் மேற்குப் புறநகர்ப் பகுதியான கிளெனெல்கில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் நிபுணராகப் பணிபுரிந்துள்ளார்.

குறித்த மசாஜ் நிலையத்திற்கு வந்த பெண்களிடம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் அளித்துள்ள நிலையில், அவர் மீது விசாரணை நடைபெற்றது. அந்த வகையில், அக்டோபர் 2021 முதல் ஜூலை 2022 வரை, அவர் 97 பேரிடம் அத்து மீறியுள்ளதை தெற்கு ஆஸ்திரேலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்துடன், மசாஜ் சென்டருக்கு வந்த 55 பெண்களை ஆபாசமாகப் படம்பிடித்த குற்றங்களும், 42 பெண்களைக் கடுமையான பாலியல் வன்கொடுமை செய்த குற்றங்களும் இதில் அடங்கும். இதையடுத்து, அவருக்கு 13 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. 

மேலும், இந்த தண்டனையின் போது 10 ஆண்டுகள் 10 மாதங்கள் பரோல் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனை அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து முன் தேதியிடப்பட்டதால், அவர் 2035-ஆம் ஆண்டில் பரோலுக்குத் தகுதி பெறுவார். இந்த பாலியல் குற்றச்சாட்டில் 2022 -இல் கைது செய்யப்பட்ட இவர், தனது தண்டனைக் காலத்தை நிறைவு செய்தபிறகு ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian Massage Therapist Sentenced to 13 Years in Prison for Sexually Abusing 61 Women Over Nine Months


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->