படிப்புக்கு வயது தடை இல்லை; 66 வயதில் இறுதியாண்டு மருத்துவம் படிக்கும் சுஜாதா ஜடாவின் அசரவைக்கும் பின்னணி..? - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 66 வயது பெண்மணி ஒருவர் மருத்துவப் படிப்பில் இறுதியாண்டு பயின்று வரும் நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுஜாதா ஜடா (66). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். அதன் பின்னர், பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

ஆனாலும், பணி ஓய்வுக்குப் பிறகு, ஓய்வெடுக்க விரும்பாத அவர், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவம் படிக்கத் தீர்மானித்துள்ளார். அதன்படி, தேசிய அளவிலான 'நீட்' (NEET) நுழைவுத் தேர்வெழுதி வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்ய படவைத்துள்ளார்.

தற்போது காரைக்காலில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். (MBBS) இறுதியாண்டு பயின்று வரும் சுஜாதா ஜடா முதன்முதலில் கல்லூரிக்குள் நுழைந்த போது, அவரது வயதின் காரணமாக அங்கிருந்த மாணவர்கள் அவரைப் புதிய பேராசிரியர் என்று நினைத்து வரவேற்றுள்ளனர். 

அப்போது அவர் ''நானும் உங்களைப் போன்ற ஒரு மாணவிதான் என்று கூறி அங்கிருந்த சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அதாவது, சத்தாகும் படிப்பிற்கும், வயது ஒரு தடை இல்லை என்பதை சுஜாதா ஜடா நிரூபித்துள்ளார்.

சுஜாதா ஜடா, தனது எதிர்காலக் கனவு குறித்து கூறுகையில், "படிப்பை முடித்தவுடன், எனது சொந்தக் கிராமத்தில் ஒரு சிறிய மருத்துவமனையை அமைத்து, அங்குள்ள ஏழை மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவச் சேவை செய்வதே எனது லட்சியம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The background of Sujatha Jada who is studying medicine at the age of 66


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->