மிட்சல் ஸ்டார்க் வேகத்தில் வீழ்ந்த ராஜஸ்தான்; 05 விக்கெட்டுகளால் அபார பெற்றிப்பெற்ற டெல்லி அணி..! - Seithipunal
Seithipunal


19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62-வது லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியில் டெல்லி- ராஜஸ்தான் அணிகள் மோதின.  இதில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. 

அணியின் சார்பில், ஜெஸ்வால் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். வைபவ் சூரியவன்ஷி 46, ஜுரேல் 53, அணியின் கேப்டன் பாராக் 51, என அதிகபட்சமாக ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.

டெல்லி அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய மிட்சல்  ஸ்டார்க், 04 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லுங்கி இன்கிட்டி மற்றும் மாதவ் திவாரி தலா 02 விக்கெட்டினை வீழ்த்தினர்.

அடுத்து 194 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து 05 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 56 ரன்களும், அபிஷேக் போரெல் 51 ரன்களும் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணி சார்பில் ஜோப்ரா ஆச்சர், பிரஜேஷ் சர்மா தலா 02 விக்கெட்டினையும், தசுன் ஷனக 01 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi Defeats Rajasthan by 5 Wickets


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->