இந்திய வெளியுறவு செயலாளர் அமெரிக்கா துணை செயலாளருடன் சந்திப்பு.! இந்தோ-பசிபிக் குறித்து ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா அமெரிக்கா வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவு துணை செயலாளரான வெண்டி ஷெர்மானை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் இந்திய-அமெரிக்க உறவுகள், இருதரப்பு பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுவதற்கான வழிகள் மற்றும் உக்ரைன் நிலைமைகள் குறித்து விவாதித்தார்.

இதையடுத்து ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொண்டு உக்ரைன் மக்களுக்கு அமெரிக்காவின் அர்ப்பணிப்பை ஷெர்மன் சுட்டிகாட்டினார் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனநாயகக் கொள்கைகள், பிராந்திய பாதுகாப்பு மற்றும் செழிப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் குவாட் கூட்டாண்மை உட்பட பிராந்திய மற்றும் பலதரப்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளையும் குறித்தும் விவாதித்ததாக நெட் ப்ரைஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Foreign Secretary Kwatra meets US Deputy Secretary Sherman


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->