பிரசவ வார்டிற்குள் ஆண்.. பிறந்த அழகான குழந்தை.. பதறிப்போன மருத்துவமனை நிர்வாகம்...!! - Seithipunal
Seithipunal


இலங்கை நாட்டில் உள்ள மத்தாரை மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனையில், கடந்த வாரத்தின் போது அப்பகுதியை சார்ந்த நபர் வயிற்று வலியால் அவதியுற்றுள்ளார். பின்னர் அங்குள்ள மாத்தறை மருத்துவமனைக்கு சென்று அனுமதியாகியுள்ளார். 

இவரது தோற்றம் பார்ப்பதற்கு முகத்தில் தாடியுடன் இருந்த நிலையில், இவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஆண்கள் வார்டிற்கு அனுமதி கொடுத்துள்ளனர். ஆண்கள் வார்டுக்கு சென்ற பின்னர் மேற்கொண்ட சோதனையில், இவரது வயிற்றில் குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்த மருத்துவர்களுக்கு, எந்த நேரமும் குழந்தை பிறக்கலாம் என்ற அவசரமும் காத்திருந்ததால் பிரசவ வார்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

முகத்தில் தாடி மற்றும் மீசையுடன் பிரசவ வார்டிற்குள் ஆண் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்து பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாகினர். 

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த பதிலில், அவர் பிறப்பில் பெண்ணாக இருந்தாலும், ஹார்மோன் சுரப்புகள் காரணமாக ஆணை போல வாழ்ந்து வந்துள்ளார் என்றும், இவரது தாடி மற்றும் மீசைக்கு அதுவே காரணம் என்றும் தெரிவித்தனர். 

மேலும், இவர் மனதளவில் தோற்றத்தில் ஆணாக இருந்தாலும், உடலளவில் பெண் என்பதால், அறிவியல் ரீதியாக குழந்தையை பெற்றுக்கொள்ள இயலும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்க இயலாத நிலையும் இருப்பதால், குழந்தை தற்போது மருத்துவமனை நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ் உள்ளது. 

இது தொடர்பாக அந்த நபர் தனக்கு குழந்தை வேண்டாம் என்றும், தான் குழந்தையை வளர்க்க விரும்பவில்லை என்றும் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது அடையாள அட்டையினை சோதனை செய்த சமயத்தில், இவர் ஆட்டோ ஓட்டுநர் என்பதும், இவர் தனது விபரங்களை ஆண் பாலினத்தில் மட்டுமே கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Srilanka Harmon changes girl delivery baby with long beard and male activity


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal