நாயின் எச்சிலால் பரிதாபமாக உயிரிழந்த நபர்.. மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்.!! உஷார்.!! - Seithipunal
Seithipunal


ஜெர்மனி நாட்டினை சார்ந்த 63 வயதுடைய முதியவர் கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனை., இளைப்பு போன்ற அறிகுறிகளோடு கடுமையாக அவதியுற்று வந்துள்ளார். இதனால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு சிகிச்சையளிக்க துவங்கிய மருத்துவர்கள்., பாதிக்கப்பட்ட முதியவர் கடுமையான செப்சிஸ் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சையை அளிக்க துவங்கினர்.

மேலும்., முதியவரின் முகத்தில் சொறி., நரம்பு வலி மற்றும் கால்களில் காயங்கள் என்று துவங்கி மூன்று நாட்களுக்குள்ளாகவே உடல்நிலையானது கடுமையான அளவில் மோசமடைந்துள்ளது. இதுமட்டுமல்லாது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மூடல்., இரத்த நாளங்களில் இரத்தம் உறைவது., தோல் அழுகியது என்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனைப்போன்று நிமோனியா, குடலிறக்க பிரச்சனை மற்றும் 41 டிகிரி செல்ஸியஸ் காய்ச்சல் என்று தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக அவதியுற்று பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மருத்துவர்கள் தெரிவித்த சமயத்தில்., பாதிக்கப்பட்ட நபர் கப்னோசைட்டோபாகா கேனிமோர்சஸ் என்னும் பாக்டீரியா தோற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும்., இது நாய்கள் கடித்தால் அல்லது நக்கினால் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உடையவர்களுக்கு எளிதாக தொற்று பரவும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் சுவாசம் மற்றும் சொறி பிரச்சனை போன்றவை ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Germany man died dog lick doctors giving caution


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->