வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த பேரதிர்ச்சி.! பதறிப்போன மருத்துவர்கள்.!!  - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள பெர்த் நகரை சார்ந்த பெண்மணி கடந்த 6 மாதங்களாக தனது வயிற்று பகுதியை அசைக்க முடியாமல் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளார். அவர் நடக்கும் போதும்., உடலை அசைக்கும் போதும் அவருக்கு பயங்கரமான வயிற்று வலியானது ஏற்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாது காலணிகளை கூட அணிய முடியாமல் கடுமையான வலியால் துடித்து வந்த நிலையில்., மருத்துவமனைக்கு சென்று உடலை பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி மருத்துவமனைக்கு சென்று வயிற்று வலி குறித்து மருத்துவர்களிடம் கூறியுள்ளார். 

இதனை கேட்ட மருத்துவரால் அல்ட்ரா ஸ்கேன் செய்து பார்த்த சமயத்தில் அவர்களுக்கு எந்த விதமான அறிகுறியும் தெரியவில்லை. மேலும்., மாதவிடாய் பிரச்சனை அல்லது கருப்பை புற்றுநோய் குறித்த அறிகுறிகளாக இருக்கலாம் என்று சந்தேகித்து அதற்கான சோதனையும் செய்துள்ளனர். 

இதனையடுத்து அவரது உடல் உள்ளுறுப்புகள் பகுதியில் மேற்கொண்ட சிகிச்சையில் அவருக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று அறிக்கை வந்துள்ளது. இந்த நிலையில்., கடந்த சில நாட்களாக அதிகளவு வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார். 

அந்த சமயத்தில் மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சையில் சுமார் 4 கிலோ எடை அளவுள்ள கட்டியை., அறுவை சிகிச்சை மூலமாக எடுத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Australia a girl have stomach pain surgery done by doctors after 6 months


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal