மத்திய கிழக்கு போர் தாக்கம் எதிரொலி...! டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு...!
impact Middle East war reverberates rupee value fallen unprecedented level against dollar
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் உலக பொருளாதாரத்தை அசைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதன் தாக்கம் இந்திய ரூபாயிலும் வெளிப்படையாகக் காணப்படுகிறது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.சமீபத்திய வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக தாழ்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் சுமார் 25 சதவீதம் உயர்ந்ததே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக, கச்சா எண்ணெய் விலை, உலக பொருளாதார நிலை, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சர்வதேச நாணய சந்தை மாற்றங்கள் போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்திய ரூபாயின் மதிப்பு டாலருடன் ஒப்பிட்டு நிர்ணயிக்கப்படுகிறது.
தற்போதைய போர் சூழ்நிலை காரணமாக இந்த சமநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
English Summary
impact Middle East war reverberates rupee value fallen unprecedented level against dollar