ரஷ்யா- உக்ரைன் போர் முடிவுக்கு கொண்டு வருவேன்...! - தொலைபேசியில் புதினுடன் டிரம்ப் உரைத்தது
I will end Russia Ukraine war Trump spoke to Putin phone
கடந்த 3 ஆண்டுகளாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் இரு நாடுகளுக்கிடையே போர் நீடித்து வருகிறது. இதில், ரஷ்யா அதிபர் புதின், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில், இரு நாட்டு பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக கூடினர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, துருக்கி நாட்டின் அதிகாரிகள் நடுநிலை வகித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசியில் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப்:
இதுகுறித்து டிரம்பின் எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டதாவது, "ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் 2 மணி நேரம் தொலைபேசியில் உரையாடினேன். ரஷ்யாவும் உக்ரைனும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும் என்று நம்புகிறேன்.
போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும்.இந்த போர் முடிந்தவுடன் அமெரிக்காவுடன் பெரிய அளவிலான வர்த்தகம் செய்ய ரஷ்யா விரும்புகிறது. அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
புதிய வேலைவாய்ப்புகள், மற்றும் செல்வதை உருவாக்க ரஷ்யாவிற்கு மிகப்பெரிய வாய்ப்புள்ளது. அதேபோல், உக்ரைன் தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வர்த்தகத்தில் பெரும் பயனாளியாக இருக்க முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.
அதே சமயம், இனி எக்காலத்திலும் நேட்டோவில் உக்ரைன் சேரக்கூடாது என்றும் கிரீமியா பகுதி முழுமையாக ரஷ்யாவுக்கே அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் ரஷ்யா நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகள் தொடர வேண்டும் என்று தொலைபேசியில் பேசிய டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுதியாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
I will end Russia Ukraine war Trump spoke to Putin phone