பாகிஸ்தானை உலுக்கிய ஆணவக் கொலை - 13 பேர் கைது!
Honor killing that shook Pakistan 13 arrested
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் திருமணமானஇளம் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்ட வீடியோ அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.இந்த கொலை சாம்பவமாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆவண கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது, சமீப காலமாக ஆங்காங்கே ஆவணக் கொலைகள் அரங்கேரி வருகிறது. ஜாதி மதம் கடந்து சென்று திருமணம் செய்யும் நபர்களை ஆவணக் கொலை செய்வது வருத்தம் அளிக்கிறது. இது பாகிஸ்தான் நாட்டை விட்டு வைக்கவில்லை என்பதற்கு 2024 மட்டும் 45 ஆவணப் பிள்ளைகள் நடந்துள்ளது என்பது வேதனையின் உச்சம்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பனோ பீபி - அஹ்சான் உல்லா என்ற இளம் ஜோடி, குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்டர்.இதனால் அந்த குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்து கோபத்தில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் பனோ பீபி - அஹ்சான் உல்லா கணவன்-மனைவியை ஆகியோரை கடத்திச் சென்று குவெட்டா நகரின் புறநகரில் வைத்து நபர் ஒருவர் துப்பாக்கியால் பலமுறை சுட்டுள்ளார். இதில் இருவரும் உயிரிழந்தனர். கடந்த மே 2025ல் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் பழங்குடியினத் தலைவர் சர்தார் சதக்ஸாய் மற்றும் பெண்ணின் சகோதரன் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெண்ணின் சகோதரன் முறையீட்டின் பேரில் , பழங்குடியினத் தலைவர் இந்த கொலையை செய்ய உத்தரவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மனித உரிமைகள் ஆணையத்தின் தகவல்படி, பாகிஸ்தானில் 2024 இல் குறைந்தது 405 ஆணவக்கொலைகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Honor killing that shook Pakistan 13 arrested