புனித பயணம் துயரப் பாதையாகி விட்டது! சவுதியில் இந்திய பயணிகள் பலர் பரிதாப பலி...!
holy pilgrimage become path tragedy Many Indian pilgrims tragically died Saudi Arabia
சவுதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவிலிருந்து மெதீனாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்ட குழுவினர் சென்ற பஸ் பெரிய விபத்தில் சிக்கி பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. 43 பேரை ஏற்றிச் சென்ற அந்த பஸ், இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் முப்ரிஹத் பகுதியை நெருங்கியபோது, டீசல் கொண்டு சென்ற லாரியுடன் மோதி நொறுங்கியுள்ளது.

இந்த பயங்கர விபத்தில், பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 உம்ரா பயணிகள் உயிரிழந்துள்ளனர். உயிருடன் மீண்டது ஒரே ஒருவர் மட்டுமே என்பது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
உம்ரா சடங்குகளை மெக்காவில் நிறைவு செய்து, மெதீனாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவத்துக்குப் பின், பாதிப்புக்குள்ளானவர்களின் விவரங்களை உறுதிப்படுத்தவும், குடும்பத்தினருக்கு தகவல் தரவும், சவுதி அரசு சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்:
79979-59754
99129-19545
English Summary
holy pilgrimage become path tragedy Many Indian pilgrims tragically died Saudi Arabia