கொடூரத்தின் உச்சி...! கராகஸில் குண்டு மழை: அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 40 பேர் பலி...! - Seithipunal
Seithipunal


வெனிசுலா தலைநகர் காரகாஸ் நகரில் உள்ள முக்கிய ராணுவ தளங்களை குறிவைத்து, “ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்” என்ற பெயரில் அமெரிக்கா நேற்று அதிகாலை திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இந்த அதிரடி நடவடிக்கையின் போது, வெனிசுலா அதிபர் நிகொலஸ் மதுரோவும், அவரது மனைவியும் அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அந்நாட்டில் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த அறிவிப்புகள் உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க தாக்குதலால் வெனிசுலா முழுவதும் கடும் பதற்றம் நிலவி வருவதால், அந்நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வெனிசுலாவின் இடைக்கால அதிபராக துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த நிலையில், அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளதாக வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர், மதுரோவின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த வெனிசுலா ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், அதிபர் மாளிகை மற்றும் ராணுவ முகாம்களுக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களும் தாக்குதலில் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தாக்குதலால் பல முக்கிய கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதுடன், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, டொனால்ட் டிரம்ப் முன்னதாக பேசியபோது, “இந்த ராணுவ நடவடிக்கையில் ஒரு அமெரிக்க வீரருக்கும் காயம் ஏற்படவில்லை.

முழு தாக்குதலையும் டிவி நிகழ்ச்சியைப் பார்ப்பது போல நேரலையில் கவனித்தேன்” என்று கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த சம்பவம் வெனிசுலாவை மட்டும் அல்லாமல், உலக அரசியல் சூழலையே பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

height brutality Bombing Caracas 40 people including civilians killed American attack


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->