பிரேசிலில் கொட்டி தீர்த்த கன மழை! வெள்ளம், நிலச்சரிவால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் அவலம்.! - Seithipunal
Seithipunal


பிரேசிலில் கொட்டி தீர்த்த கன மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பிரேசில் நாட்டிலுள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள துபாராவோ நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகள், கட்டடங்கள் போன்ற அனைத்து இடங்களும் நீரில் மூழ்கி உள்ளன.

மேலும் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். கொட்டி தீர்த்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து நிலச்சரிவு மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சாலைகள் துண்டிக்கப்படும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy rain lashesout Brazil affects normal life


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->