ஒருநாள் ஆறுதல்...மறுநாள் அதிர்ச்சி...! தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உச்சத்தை நோக்கி...! இன்றைய நிலவரம் என்ன...? - Seithipunal
Seithipunal


ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் தங்கம் விலை நேற்று சிறிதளவு தளர்வைக் காட்டி வாங்குவோருக்கு ஓரளவு நிம்மதியை வழங்கியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.12,480-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ரூ.40 குறைந்து ரூ.12,440 ஆக விற்றது.

அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.99,840-லிருந்து ரூ.320 குறைந்து ரூ.99,520 ஆக இறங்கியது.தங்கம், வெள்ளி விலைகள் தொடர்ந்து போட்டிபோட்டு உச்சம் தொட்டு வந்த சூழலில், கடந்த ஓரிரு நாட்களாக ஏற்பட்ட இந்த விலை சரிவு நகை வாங்குவோருக்கு சிறிய ஆறுதலாக அமைந்தது.

ஆனால் அந்த நிம்மதி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வை பதிவு செய்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் என்ற மனதைக் கவரும், அதே நேரத்தில் அதிர்ச்சியூட்டும் எல்லையை தாண்டியுள்ளது.

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.12,580 ஆகவும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,00,640 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று ஏற்றத்தை கண்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.260 ஆகவும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் என்ற அளவிலும் விற்பனையாகிறது.
கடந்த 5 நாட்களின் தங்கம் விலை நிலவரம் (22 காரட் – ஒரு சவரன்):
1-1-2026 – ரூ.99,520
31-12-2025 – ரூ.99,840
30-12-2025 – ரூ.1,00,800
29-12-2025 – ரூ.1,04,160
28-12-2025 – ரூ.1,04,800
கடந்த 5 நாட்களின் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்):
1-1-2026 – ரூ.256
31-12-2025 – ரூ.257
30-12-2025 – ரூ.258
29-12-2025 – ரூ.281
28-12-2025 – ரூ.285
புத்தாண்டு தொடக்கத்தில் தங்கம், வெள்ளி விலைகள் காட்டும் இந்த ஏற்றத் தாழ்வுகள், முதலீட்டாளர்களையும் பொதுமக்களையும் கவனமாக கண்காணிக்க வைக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One day relief next day shock Gold and silver prices heading towards record highs again What situation today


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->